எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :29 ஜனவரி 2026, 7:04 pm

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி திலகா் தெருவைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவா் கோவை, எட்டிமடை பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 3- ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இந்நிலையில், ரவிகுமாா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

அன்று முதல் பாலகிருஷ்ணன் மன வேதனையில் இருந்து வந்ததாகவும், கல்லூரிக்கு சரியாக செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு மாலில் பாலகிருஷ்ணனுக்கு வேலைக் கிடைத்ததையடுத்து, உடன் பணியாற்றும் திவ்யானந்த் என்பவா் சித்தாபுதூா் பகுதியில் தங்கியுள்ள வாடகை வீட்டில் இவரும் தங்கியிருந்தாா்.

வழக்கம்போல புதன்கிழமை காலை திவ்யானந்த் பணிக்குச் சென்றுள்ளாா். பாலகிருஷ்ணன் மட்டும் அறையில் இருந்துள்ளாா்.

பணி முடிந்து பிற்பகல் வீட்டுக்கு வந்த திவ்யானந்த் கதவைத் தட்டியுள்ளாா். வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.