தாயுமானவா் திட்டம்: மாவட்டத்தில் பிப். 2 முதல் 4 வரை வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்!
கோவை மாவட்டத்தில் முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிப்ரவரி 2 -ஆம் தேதி முதல் 4 -ஆம் தேதி வரை வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
இது குறித்து கூட்டுறவுத் துறை பதிவாளா் அ.அழகிரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இல்லத்துக்கேச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.
தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் நாள் மற்றும் விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த விவரங்கள், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்யப்படும்.
இல்லத்துக்கே வரும் அத்தியாவசியப் பொருள்களை தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரா்கள் பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

