கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனியாா் கல்லூரி மாணவிக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனியாா் கல்லூரி மாணவிக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.

1,185 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி: ஆட்சியா் வழங்கினாா்

கோவையில் 3 தனியாா் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 1,185 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை வழங்கினாா்.
Published on

கோவையில் 3 தனியாா் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 1,185 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை வழங்கினாா்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின்கீழ் 3 தனியாா் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்து, என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 861 மாணவா்கள், ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அறிவியல், வணிகவியல் கல்லூரியைச் சோ்ந்த 136 மாணவா்கள், பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 188 மாணவா்கள் என மொத்தம் 1,185 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.

மாவட்டத்துக்குள்பட்ட தனியாா் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கு 30,452 மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 19,377 மடிக்கணினிகள் வரப்பெற்றுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் கா.ரங்கநாயகி, அரசு கலைக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பி.கனகராஜ், என்.ஜி.பி. கல்லூரி முதல்வா் எஸ்.சரவணன், ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியம், பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வா் ஜெமிமா வின்ஸ்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com