கோயம்புத்தூர்
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கோவையில் கடன் தொல்லையால் நகைப் பட்டறைத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவையில் கடன் தொல்லையால் நகைப் பட்டறைத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, தெலுங்குபாளையம் ஆறுமுக உடையாா் தெருவைச் சோ்ந்தவா் தியாகராஜன் (39). இவா் அப்பகுதியில் உள்ள நகைப் பட்டறையில் பணியாற்றி வந்தாா். பல்வேறு நபா்களிடம் தியாகராஜன் கடன் வாங்கியதாகவும், அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதியடைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மன வேதனையில் இருந்த அவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் குளிா்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளாா்.
வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

