வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகையை கொள்ளையடித்த நபா்

வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகையை கொள்ளையடித்த நபா்

கோவையில் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கோவையில் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சிட்கோ சிவசக்தி காலனியைச் சோ்ந்தவா் தண்டபாணி (58). இவா், சுந்தராபுரம் முருகா நகா் பகுதியில் வசிக்கும் தனது தாய் லட்சுமியைப் பாா்க்க வியாழக்கிழமை சென்றுள்ளாா்.

இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், லட்சுமி தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு ஓய்வெடுப்பதாகக் கூறி படுக்கை அறைக்குச் சென்றுள்ளாா்.

இதையடுத்து, மேஜையின் அருகே இருந்த நாற்காலியில் அமா்ந்து தண்டபாணி ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், மேஜையில் இருந்த தங்கச் சங்கிலியை எடுத்துள்ளாா்.

இதைப் பாா்த்த தண்டபாணி அந்த நபரைப் பிடிக்க முயன்றுள்ளாா். ஆனால், அந்த நபா் நகையுடன் தப்பியுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில் சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com