கைது
கைது

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2.200 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
Published on

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2.200 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கோவை, சொக்கம்புதூா் பகுதியில் செல்வபுரம் போலீஸாா் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள மயானம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் சோனை மேற்கொண்டபோது, 2 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் தெலுங்குபாளையம் பகுதியைச் சோ்ந்த தனஞ்செயன் (36) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தனஞ்செயனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com