வால்பாறை (தனி)

தொகுதி பெயர்

வால்பாறை (தனி)

தொகுதி எண்

124

சிறப்புகள்

கோவை மாவட்டத்திலேயே எழில் கொஞ்சும் நிலப் பகுதிகளை உடைய தொகுதி வால்பாறையாகும். கடல் மட்டத்தில் இருந்து வால்பாறை வட்டம் சுமார் 3,500 அடி உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. மலைப் பகுதியையும், சமவெளிப் பகுதியையும் ஒருங்கே கொண்ட தொகுதி. பெரும்பான்மை வாக்காளர்கள் ஆழியாறு, கோட்டூர் போன்ற சமவெளிப் பகுதிகளில் உள்ளனர்.

 வால்பாறையில் 50-க்கும் மேற்பட்ட தனியார் எஸ்டேட்டுகள் உள்ளன. மலைப் பகுதியில் உள்ள வாக்காளர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தோட்டத் தொழிலாளர்கள். பொள்ளாச்சி தொகுதியுடன் இரட்டைத் தொகுதியாக இருந்த வால்பாறை, கடந்த 1962-ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு தனித் தொகுதியாக உருவாக்கப்பட்டது.

எல்லை

வால்பாறை நகராட்சியின் 21 வார்டுகள், கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஓடையகுளம் பேரூராட்சிகள், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகள்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வால்பாறை வட்டம் முழுவதும்.

பொள்ளாச்சி வட்டம் (பகுதி அளவு), நாயக்கன்பாளையம்,

அம்பராம்பாளையம், ஆத்துப் பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாய்க்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாளையம், சோமந்துறை,

தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி, அர்த்தநாரி

பாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூர், அங்கலகுறிச்சி கிராமங்கள்.

ஆனைமலை (பேரூராட்சி), ஓடையகுளம் (பேரூராட்சி),

வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி), கோட்டூர் (பேரூராட்சி) முழுவதும்.

வாக்காளர்கள்

ஆண்கள் - 95,609

பெண்கள் - 1,00,161

மூன்றாம் பாலினம் - 10

மொத்தம் - 1,95,780.

இதுவரை எம்எல்ஏக்கள்....

1962   - பொன்னய்யா (காங்கிரஸ்)

1967   - இ.ராமசாமி (திமுக)

1971   -இ.ராமசாமி (திமுக)

1977   - ஆர்.எஸ்.தங்கவேலு (அதிமுக)

1980   - ஏ.டி.கருப்பையா (இ.கம்யூ.)

1984   - வி.தங்கவேலு (காங்கிரஸ்)

1989   - பி.லட்சுமி (அதிமுக. ஜெ)

1991   - ஏ.ஸ்ரீதரன் (அதிமுக)

1996   - வி.பி.சிங்காரவேலு (திமுக)

2001   - கோவை தங்கம் (த.மா.கா.)

2006   - கோவை தங்கம் (த.மா.கா.)

2011   - மா.ஆறுமுகம் (இ.கம்யூ.)

கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மா.ஆறுமுகம் 61,171 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் கோவை தங்கம் 57,760 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர்/  தொடர்பு எண்

பி.சிதம்பரம், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர்

94422 43497.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com