ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்தை

Updated On :5 ஏப்ரல் 2018, 6:52 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.,  மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  வியாழக்கிழமை கதவடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், காய்கறி மண்டிகள், ஆட்டோ தொழிற்சங்கங்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மாணவ, மாணவிகள், வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள், அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, திராவிடக் கழக நிர்வாகி ஆறுச்சாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இலக்கியன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகி தன்பால், வடிவேல், ஆதித் தமிழர் பேரவை நிர்வாகி அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.