ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த சில நாள்களாக ரயில் நிலையங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களில் ஈடுபடுபவர்களின் உணர்வுகளை ரயில்வே நிர்வாகம் முழுமையாக மதிக்கிறது. அதேநேரம், இந்தப் போராட்டங்களால் ரயில் நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ரயில்களை நிறுத்துவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பயணிகளில் அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து ரயில்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். ரயில்வே நிர்வாகம் தனது பணியை செவ்வனே செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!

மத்திய அரசுத் துறைகளில் வேலை: எழுத்துத் தேர்வுக்கு 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


