அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மதுவில் ஊமத்தங்காய் அரைத்து கலந்து விற்பனை: 3 பேர் கைது

சூலூர் அருகே மதுவில் ஊமத்தங்காயை அரைத்துக் கலந்து விற்பனை செய்ததாக 3 பேரை சூலூர் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :

சூலூர் அருகே மதுவில் ஊமத்தங்காயை அரைத்துக் கலந்து விற்பனை செய்ததாக 3 பேரை சூலூர் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
சூலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விஷ மது விற்பனை நடைபெறுவதாக சூலூர் காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சூலூர் காவல் உதவி ஆய்வாளர் லெனின் தலைமையில், காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சூலூர் பி.என்.பி.நகரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.  அப்போது, அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 15 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. 
விசாரணையில் அவர் காடம்பாடியைச் சேர்ந்த ராமசாமி மகன் தாமோதரன் (25) என்பது தெரியவந்தது. மாற்றுத் திறனாளியான இவர், சட்ட விரோதமாக மது விற்றதும், விரைவில் போதை ஏறுவதற்காக அதில் ஊமத்தம்காயை அரைத்து கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதேபோல, மதுவில் ஊமத்தம்காயை அரைத்து விற்பனை செய்ததாக செங்கத் துறையைச் சேர்ந்த கிட்டப்பன் மகன் பழனிசாமி (55), காங்கேயம்பாளையம் சடையப்பன் மகன் பெரியசாமி (45), காடம்பாடி சின்னசாமி மகன் மணி(57) ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.  மேலும், அவர்களிடம் இருந்த 2 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது. 
இதையடுத்து, 4 பேரும் சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட தாமோதரன் தவிர மீதமுள்ள 3 பேரையும் 10 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். தாமோதரன் மாற்றுத் திறனாளி என்பதால் எச்சரிக்கப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.