அன்னூர் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்னூர் சுப்பையா நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ் சங்கத் தலைவர் யு.கே.நடராஜன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ஆசிரியர் பொன்னுசாமி வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், புலவருமான ராமதாஸ் திருமந்திரம் குறித்து பேசுகையில்,
"இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே மாதிரி பாவிக்கும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பற்றற்ற வாழ்க்கை வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழ்ச் சங்க செயலாளர் அன்னாசிகுட்டி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.