ஜாதி பட்டியலில் விடுபட்ட கேரள வாழ் தமிழர்களை பட்டியலில் சேர்க்கும் பணி: விடுபட்டவர்களுக்கு அழைப்பு

ஜாதி பட்டியலில் விடுபட்டுள்ள கேரள வாழ் தமிழர்கள், பட்டியலில் சேர விரும்பினால் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read


ஜாதி பட்டியலில் விடுபட்டுள்ள கேரள வாழ் தமிழர்கள், பட்டியலில் சேர விரும்பினால் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, பலக்காடு, பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய பகுதிகளில் தமிழ் பேசும் பல்வேறு ஜாதி, இன மக்கள் 1956 மாநிலச் சீரமைப்புக்கு முன்பு இருந்து வாழ்ந்து வருகின்றனர். கேரள மாநில ஜாதிப் பட்டியலில் தமிழ் பேசும் மலைவாழ் மக்கள் (எஸ்.டி.) மற்றும் எஸ்.சி., ஓபிசி, பிசி, ஓஇசி வகைகளின் பல ஜாதிகள் உள்படுத்தப்படவில்லை. இதனால், கேரள வாழ் தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் இன்றும் வாழ்கின்றனர். இவர்களுக்கு சமூகநீதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையைச் சுட்டிக்காட்டி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும்படி கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் கேரள அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தது.
  பூலுவக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், தேவர், யாதவர், ராஜாக்கள் சோழிய வெள்ளாளர், பாண்டிய வெள்ளாளர், கார் காத்தவெள்ளாளர், பிள்ளை சமூகங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலிலும், போயர், நாயக்கர் மக்களை எஸ்.டி. பட்டியலிலும், நாவிதன், பண்டார இனங்களை ஓஇசி பட்டியலிலும் சேர்க்க கேரள பிற்பட்டோர் இனத்துக்கான கமிஷனிடம் பலமுறை முறையிட்டு கேரள மாநில தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
   சமீபத்தில் முதல்வர் பிணராயி விஜயன் தலைமையில் கூடிய கேரள மொழிச் சிறுபான்மைக் கூட்டத்தில் இப்பிரச்னை எழுப்பப்பட்டது. கேரள முதல்வர், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று கேரள ஜாதி பட்டியல் விடுபட்டுப்போன மேற்கூறிய ஜாதிகள் உள்பட இன்னும் என்னென்ன தமிழ்ச் ஜாதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்து ஜாதி பட்டியல் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கேரளத்தில் வசிக்கும் தமிழர்கள் ஜாதி பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களைப் பட்டியலில் சேர்க்கும் பணியில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் ஈடுபட்டுள்ளது. தங்கள் ஜாதி, இனங்களின் பெயர் கேரளப் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஜாதி சான்றிதழ் பெற விரும்பும் சமூகத்தினர்  உடனடியாக கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தை  9388197671 , 94461 4 9311 எண்களில் தொடர்புகொள்லாம் என  இந்த இயக்கத்தின் பொதுச்  செயலாளர்  மா.பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com