மேட்டுப்பாளையம்-கோவை இடையை ஞாயிற்றுக்கிழமை முதல் வாரத்தில் 7 நாள்களும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
கோவை - மேட்டுப்பாளையம் இடையே வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாள்கள் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை ஞாயிறு அன்றும் இயக்க வேண்டும் என பயணிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் இந்த ரயில் வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் டிஎல்எஸ் ராஜேந்திரன் கூறியதாவது:
மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 8.15 மணி, 10.40 மணி, மதியம் 1 மணி, மாலை, மாலை 4.30 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு கோவை ரயில் நிலையம் சென்றடையும். அதேபோல் கோவையில் இருந்து தினமும் காலை 9.30 மணி, 11.50 மணி, மதியம் 3.15, மாலை 5.55 மணிக்கு ரயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். கோவை - மேட்டுப்பாளையத்துக்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.
விடுமுறை நாள்களில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வன பத்திரகாளியம்மன் கோயில், காரமடை அரங்கநாதர் கோயில், கல்லாறு பழப்பண்ணை, பிளாக்தண்டர், குமரன் குன்று முருகன் கோயில், குருந்த மலை குழந்தை வேலாயுதசாமி கோயில், உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்ல இந்த ரயில் உதவியாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.