பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :23 ஜனவரி 2019, 9:23 am IST

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 கோவை, கணபதி அருகே காந்தி மாநகரைச் சேர்ந்தவர் தேவானந்தன் (51). இவர் அதே பகுதியில் பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், ஜனவரி 14 ஆம் தேதி குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திங்கள்கிழமை வீடு திரும்பினார்.
 அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.ஒரு லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தேவானந்தன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.