கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கோடைக்கால குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
குடிநீர் விநியோகத்தின் போது மின் மோட்டார் பயன்படுத்தி நீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோகிப்பாளர்கள் சரிவர பணியை மேற்கொள்ளவில்லையெனில் அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாத பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்கிட அனைத்துப் பொறியாளர்களும் விடுப்பின்றி பணிபுரிய வேண்டும்.
பொதுமக்கள் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான தங்களின் குறைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம். அதன்படி, மாநகராட்சி பிரதான அலுவலகம் - 0422-2302323, டி.ஜே.நகர் டேங்க் - 0422-2572492, கணபதி எம்எஸ்ஆர் டேங்க் - 0422-2511911, பாரதி பார்க் டேங்க் - 0422-2442236, காந்தி பார்க் டேங்க் -0422- 2471009, சாரதா மில் டேங்க்- 0422- 2676700, புலியகுளம் டேங்க்- 0422- 2316267, கிழக்கு மண்டல அலுவலகம்- 0422- 2577056, மேற்கு மண்டல அலுவலகம்-0422-2551700, வடக்கு மண்டல அலுவலகம் 0422-2243133, தெற்கு மண்டல அலுவலகம் 0422-2252481, மத்திய மண்டல அலுவலகம் 0422-2215618 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
இக்கூட்டத்தில் துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.