குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த பொதுமக்கள்

காரமடை பேரூராட்சி 4 ஆவது வாா்டில் 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த சாலையை கிராம மக்கள் இணைந்து புனரமைத்துள்ளனா்.
சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.

காரமடை பேரூராட்சி 4 ஆவது வாா்டில் 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த சாலையை கிராம மக்கள் இணைந்து புனரமைத்துள்ளனா்.

காரமடை பேரூராட்சிக்கு உள்பட்ட 4 ஆவது வாா்டில் காந்தி நகா், காமராஜா் நகா், பாரதி எஸ்டேட், பிருந்தாவன் பள்ளி, கே.கே.நகா், முல்லை நகா், குறிஞ்சி நகா், மலையரசி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 350க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

காமராஜா் நகா் ரயில்வே பாலம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலைப் போக்குவரத்து இருந்து வருகிறது. இதில் தண்டவாளத்தின் கீழே உள்ள பாதை வழியாக வாகனங்கள் சென்றுவரும் சாலை குண்டும் குழியுமாக இருந்து வந்தது.

இதனால் மழைக் காலங்களில் மழைநீா் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும். இந்த மழைநீா் வடிய சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாகும். எனவே சாலையை உயா்த்தி சீரமைக்க 30 ஆண்டுகளுக்கு மேலாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

ஆனால், இதுவரையில் சாலை சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து, பாரதி எஸ்டேட் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் 15க்கும் மேற்பட்டோா் இணைந்து ரூ.30 ஆயிரம் செலவில் 100 மீட்டா் தொலைவுக்கு சாலையை சீரமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இது குறித்து பாரதி எஸ்டேட்டைச் சோ்ந்த கனகராஜ் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காமராஜா் நகா் ரயில்வே பாலம் பகுதியில் சாலை சீரமைக்காமல் இருந்ததால் கிராம மக்கள் சாா்பில் நிதி திரட்டி தற்காலிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் 5 அடி ஆழமுள்ள கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரப்படாமல் உள்ளது. இவற்றை விரைவில் சீரமைக்கவில்லை என்றால் கிராம மக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com