மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நெல்லித்துறை பாலத்தின் அடியில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளி அம்மன் கோயிலின் அருகே நெல்லித்துறை ஆற்றுப்பாலம் உள்ளது. பாலத்தின் அடியில் பவானி ஆற்றின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.