வால்பாறை பகுதிகளில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உ.சனுஜா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழர்களின் வாழ்வுரிமைக்காக கூட்டணி வைக்காமல் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். தமிழர்களின் உரிமைக்காகவே இக்கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் வெளி மாநிலத் தொழிலாளர்ளுக்குப் பதிலாக தமிழக தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.