கோவையில் ரூ.37.5 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 11th April 2019 08:11 AM | Last Updated : 11th April 2019 08:11 AM | அ+அ அ- |

கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சத்தி சாலை, ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
அவை வங்கிக்கு சொந்தமானது என்றும், ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக கொண்டுச் செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கோவை (வடக்கு) தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் அமுதனிடம் ஒப்படைத்தனர்.