ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
By DIN | Published On : 26th April 2019 07:20 AM | Last Updated : 26th April 2019 07:20 AM | அ+அ அ- |

துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிப் பணம் பறித்த 2 நபர்களை துடியலூர் போலீஸார் கைது செய்தனர்.
தொப்பம்பட்டி பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர், ராஜராஜேஸ்வரி பேருந்து நிறுத்தத்தில் தனது ஆட்டோவில் வியாழக்கிழமை அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் வாடகை பேசி ஆட்டோவில் சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்றவுடன் அவரின் நண்பர் ஆட்டோவில் ஏறியுள்ளார்.
பின்னர் இருவரும் சிவகுமாரை மிரட்டி அவரிடமிருந்து ரூ. 500 பணத்தை பறித்தனர்.
அப்போது சிவகுமார் சப்தம் போடவே, அருகில் இருந்த பொதுமக்கள் 2 நபர்களையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம், மேலூர் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (33), காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரைச் சேர்ந்த ஜெகதீஷ் (38) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்த கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.