வழிப்பறி வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 26th April 2019 07:19 AM | Last Updated : 26th April 2019 07:19 AM | அ+அ அ- |

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் முகமது அபாபில் (29). இவர், காரமடை, ஆசிரியர் காலனி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2010 ஆம் ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது 6 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிபதி சரவணபாபு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினர்.