இலவச தொழுநோய் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 12th February 2019 06:21 AM | Last Updated : 12th February 2019 06:21 AM | அ+அ அ- |

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சோமையனூரில் உள்ள விகேவி சேம்பர் வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த சிறப்பு தோல் நோய் சிகிச்சை முகாமில் செங்கல் சூளைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்றனர்.
இதற்கு, கோவை மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் துணைஇயக்குநர்(தொழுநோய்) டாக்டர் எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். விகேவி தொழில் குழுமத்தின் நிறுவனர் வி.கே.வி.சுந்தரராஜன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தார். சோமையம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் எம்.பிரபா முகாமில் பங்கேற்றவர்களைப் பரிசோதித்து மருந்துகளை வழங்கினார்.
நல வாழ்வு ஆலோசகர் ஏ.சக்திவேல், முடநீக்கியல் நிபுணர் அன்பு, மருத்துவ மேலாளர் ராமசாமி ஆகியோர் நல வாழ்வுக் கல்வி, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். இதில், தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இருவருக்கு மருத்துவக் காலணிகள், போர்வைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சேம்பர் மேலாளர் செந்தில், சமூக ஆர்வலர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.