கோவை அருகே கவுண்டம்பாளையத்தை அடுத்த ஞானம்பிகா மில் பிரிவில் சாலையோரத்தில் நடப்பட்டிருந்த மதிமுக கொடிக் கம்பத்தை மர்மநபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளனர்.
கோவை- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சுப்பிரமணியம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள உணவகத்தின் எதிரில் மதிமுக கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் இக்கொடிக்கம்பம் வெட்டிப்பட்ட நிலையில் கீழே சாய்ந்து கிடந்தது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கவுண்டம்பாளையம் பகுதியின் மதிமுக கிளைச் செயலாளர் வெ.சு.சம்பத், மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் மு.கிருஷ்ணசாமி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு, துடியலூர் போலீசாருக்கு தகவல்
அளித்தனர். அங்கு சென்ற போலீஸார் இது குறித்து அப்பகுதியில் விசாரித்தனர். மேலும், இது தொடர்பான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.