யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி: பொதுமக்களுக்கு செயல்விளக்கம்
By DIN | Published On : 12th February 2019 06:23 AM | Last Updated : 12th February 2019 06:23 AM | அ+அ அ- |

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவியின் செயல்பாடு குறித்து அன்னூரில் பொதுமக்களுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை செயல்விளக்கம் அளித்தனர்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் யாருக்கு நாம் வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவியின் செயல்பாடு குறித்து அன்னூர் வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு நான்கு ஊராட்சிகள் வீதம் 21 ஊராட்சிகளிலும் செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இதில், காட்டம்பட்டி, குப்பேபாளையம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு இக்கருவியின் செயல்பாடு குறித்து அன்னூர் தெற்கு வருவாய் ஆய்வாளர் சையது இலியாஸ் திங்கள்கிழமை செயல் விளக்கம் அளித்தார். வாக்காளர்கள் வாக்களித்ததும் இரண்டு விநாடிகள் கழித்து இக்கருவியின் திரையில் யாருக்கு வாக்களித்தோமோ அந்த வேட்பாளரின் பெயரும், சின்னமும் தெரியும் என பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
இதில், கிராம நிர்வாக அலுவலர் அமீர் ஹாசன், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.