உதவி வேளாண் அலுவலர் தேர்வு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி
By DIN | Published On : 04th January 2019 07:15 AM | Last Updated : 04th January 2019 07:15 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி வேளாண் அலுவலர் பணிக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது.
டி.என்.பி.எஸ்.சி. மூலம் 580 உதவி வேளாண் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிளஸ் 2 கல்வித் தகுதியுடன் 2 ஆண்டு வேளாண் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 27 ஆம் தேதிக்குள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு ஜனவரி 9 ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், போட்டித் தேர்வுக்கான பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்ததற்கான ஆதாரம், புகைப்படத்துடன் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 8 ஆம் தேதிக்குள் அணுகி பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.