அன்னூர் ஒன்றியத்தில் பாஜக மகாசக்தி கேந்திர கூட்டம்
By DIN | Published On : 07th January 2019 08:49 AM | Last Updated : 07th January 2019 08:49 AM | அ+அ அ- |

அன்னூர் ஒன்றியத்தில் 4 இடங்களில் பாஜக சார்பில் மகாசக்தி கேந்திர கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அன்னூர் ஒன்றியத்தில், கணேசபுரம், பசூர், கெம்பநாயக்கன்பாளையம், கரியாக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இக்கூட்டங்களில் கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமை வகித்து உரையாற்றினார்.
அவிநாசி தொகுதி அமைப்பாளர் கதிர்வேல், தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார், ஒன்றியத் தலைவர் விஜயகுமார், நகரத் தலைவர் ராஜராஜசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜெயபால் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்கள் திருமூர்த்தி, வெள்ளிங்கிரி, தனபால் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.