உயர்மட்ட மேம்பாலம் கட்ட பூமி பூஜை
By DIN | Published On : 07th January 2019 08:49 AM | Last Updated : 07th January 2019 08:49 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அருகே அண்ணா நகர் முதல் பொங்கம்பாளையம் வரை ரூ.1.67 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெள்ளாதி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகர் முதல் பொங்கம்பாளையம் வரை ரூ.1.67 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் ஒ.கே.சின்னராஜ் தலைமை வகித்து பணிகளைத் தொடக்கிவைத்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், பெள்ளாதி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பூபதி (எ) குமரேசன், ஒப்பந்ததாரர் வெங்கடாசலம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.