இளைஞரை பாட்டிலால் குத்தியவர் மீது வழக்கு
By DIN | Published On : 03rd July 2019 09:21 AM | Last Updated : 03rd July 2019 09:21 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை பாட்டிலால் குத்தியவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எண். 4, வீரபாண்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் ராகுல் (21). இவர் திங்கள்கிழமை பட்டத்தரசியம்மன் கோயில் அருகில் தனது நண்பர்களுடன் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் என்பவர் ராகுலின் கையில் பாட்டிலால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.