என்.எல்.பி. பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அளவிலான மகளிர் தடகளப் போட்டி
By DIN | Published On : 03rd July 2019 09:21 AM | Last Updated : 03rd July 2019 09:21 AM | அ+அ அ- |

மேட்டுபாளையம் என்.எல்.பி. பாலிடெக்னிக் கல்லூரி, நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன இணைந்து 4ஆம் ஆண்டாக மகளிருக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை நடத்தின.
என்எல்பி கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்ட அளவில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் அன்னுர் செயின்ட் மேரீஸ் பள்ளி 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது. ஆலாங்கொம்பு எஸ்.எஸ்.வி.எம். பள்ளி 51 புள்ளிகள் பெற்று 2 ஆம் இடம் பெற்றது.
தனி நபர் புள்ளிகள் அடிப்படையில் 10 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி மாணவி கே.பி நேஷிகா, 12 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் விஜயலட்சுமி பள்ளி மாணவி ஆர்.புவனிஷா, செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி ஆர். கவிந்த்ரா, 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி மாணவி எஸ்.பூந்தளிர், 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவி டி.அபிஸ்ரீ முதலிடம் பிடித்தனர். பரிசளிப்பு விழாவுக்கு நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் பொருளாளர் கார்த்திக் வரவேற்றார். தலைவர் மகேஷ் குமார், துணைத் தலைவர் ஜெகநாதன், செயலாளர் பாலமுரளி ஆகியோர் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். முடிவில் இணைச் செயலாளர் கல்யாண்குமார் நன்றி கூறினார்.