வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நியமனம்
By DIN | Published On : 14th June 2019 08:47 AM | Last Updated : 14th June 2019 08:47 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதிலும் காலியாக இருந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடங்களை நிரப்பி அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இருந்தவர் பால்ராஜ். இவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து அதே அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்த சரவணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், திருப்பூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பி.குமாரும், ஈரோடு செயலாக்கப் பிரிவு அலுவலராக காந்தியும், ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக விநாயகமும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 20-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பி அரசு உத்தரவிட்டுள்ளது.