வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு
By DIN | Published On : 14th June 2019 08:43 AM | Last Updated : 14th June 2019 08:43 AM | அ+அ அ- |

பொள்ளாச்சியில் பூட்டியிருந்த வீட்டின் கதவின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் அம்மிணீஸ்வரி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி (80), இவர் வீட்டை பூட்டி விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் இருந்தவர்கள் நிர்மலாதேவிக்கு தகவல் கொடுத்துள்ளனர். நிர்மலாதேவி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 6 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.