வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
By DIN | Published On : 14th June 2019 08:42 AM | Last Updated : 14th June 2019 08:42 AM | அ+அ அ- |

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம், ரூ. 5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தாதகாபட்டி அருகே உள்ள பொம்மன்ன செட்டிக் காட்டைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (26). இவருக்கு நண்பர் ஒருவர் மூலமாக சரவணம்பட்டியைச் சேர்ந்த மார்கோஸிஸ் நவமணி என்பவர் அறிமுகமானார். இவர் ஹாங்காங்கில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜானகிராமனிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் பெற்றுள்ளார்.
ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து கோவை மாநகரக் குற்றப்பிரிவு போலீஸில் ஜானகிராமன் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய
விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 5 பேரிடம் ரூ. 5 லட்சம் பெற்று மார்கோஸிஸ் நவமணி ஏமாற்றியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக இருந்த மார்கோஸிஸ் நவமணியை தேடி வந்தனர். இந்நிலையில் கோவையில் வியாழக்கிழமை அவரைக் கைது செய்தனர்.