கோவையின் தொழில்களை பாதுகாப்பதில் முனைப்புக் காட்டுவேன்: பாராட்டு விழாவில் எம்.பி. பேச்சு

கோவையின் தொழில்களை பாதுகாப்பதில் முனைப்புக் காட்டுவேன் என்று தொழில் அமைப்புகளின்

கோவையின் தொழில்களை பாதுகாப்பதில் முனைப்புக் காட்டுவேன் என்று தொழில் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  உறுதி அளித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு தொழில் அமைப்புகளின் சார்பில் கோவையில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கோவை இந்திய தொழில் வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொழில் வர்த்தக சபையின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார். செயலர் பிரபு முன்னிலை வகித்தார். 
விழாவில் கோவை மாவட்ட வளர்ச்சி தொடர்பான கோரிக்கை மனுவை தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பி.ஆர்.நடராஜனிடம் வழங்கினர். இதைத் தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் பேசியதாவது:
கோவையின் தொழில்கள் அனைத்தையும் பாதுகாக்க முனைப்போடு செயல்படுவேன். முன்னரே நாங்கள் சொன்னதுபோல ஜாப் ஆர்டர்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அறவே கூடாது என்பதில் உறுதியோடு நின்று மக்களவையில் அழுத்தமான குரலை எழுப்புவேன். வரிவிதிப்பு இல்லாமல் அரசை நடத்த முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம். ஆகவே உற்பத்தி செய்யப்பட்டு முழுமையடைந்த பொருள்களுக்கு குறைந்தபட்ச ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.
 அதேபோல அடுத்த 5 ஆண்டு காலத்திலும் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வேன். கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர ரயில், கோவையில் இருந்து மதுரைக்கு கூடுதல் ரயில், ரயில் நிலையத்தில் மூன்றாவது வழித்தடம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து ஏற்கெனவே முறையிட்டிருக்கிறேன். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்பேன். அதேபோல், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை ஆகிய திட்டங்களுக்கு தொழில் துறையினரின் ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற்று மாவட்டத்தின் வளர்ச்சியில் முழுமையான பங்கினை ஆற்றுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com