பொள்ளாச்சியில் 2 சுயேச்சைகள் மனு தாக்கல்
By DIN | Published On : 22nd March 2019 07:58 AM | Last Updated : 22nd March 2019 07:58 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 2 சுயேச்சைகள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
உடுமலை சங்கிலி வீதியைச் சேர்ந்தவர் உமர்அலி, சமூகஆர்வலர். 7ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அன்னை தெரசா அறக்கட்டளையின் இயக்குநராக உள்ளார். இவர் பொள்ளாச்சி முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ரவிகுமாரிடம் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
பல்வேறு சமூக நலப் பணிகளை செய்துவரும் இவர் ஏற்கெனவே பொங்கலூர் சட்டப் பேரவை தொகுதியிலும், உடுமலை சட்டப் பேரவை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். உடுமலை நகராட்சியில் உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளார். தற்போது பொள்ளாச்சி மக்களவைக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உமர்அலி கூறுகையில், பொதுமக்களின் பல்வேறு குறைகளைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அதிகாரிகள் மக்களை சந்திப்பதில்லை. கணவனை இழந்த பெண்கள், முதியோர்களுக்கு ஓய்வூதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற பல குறைகளைச் சரிசெய்ய மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்றார்.
இளைஞர் மனு தாக்கல்
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையைச் சேர்ந்தவர் அசோக்ராஜா (27). பி.டெக் பட்டதாரியான இவர் தனது தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வருவதுடன், பல்வேறு சமூகப் பணிகளை செய்துவருகிறார். இவர் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வருவாய் கோட்டாட்சியர் ரவிகுமாரிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல்
செய்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...