மேட்டுப்பாளையத்தில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 22nd March 2019 07:59 AM | Last Updated : 22nd March 2019 07:59 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறுமுகை, சக்தி சாலையில் கூத்தமண்டி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பவானிசாகர் சிரகிரி புளூமெட்டல் பணியாளர் பென்னி (44) காரில் ரூ.1.20 லட்சம் கொண்டு வந்திருந்தது தெரிந்தது. இந்தப் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் மேட்டுப்பாளையம் சார்நிலை கருவூல அலுவலகத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தொகுதி
தேர்தல் அலுவலர் குமரேசனிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...