கோவை, பொள்ளாச்சியில் ரூ.3.98 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 09:32 AM | Last Updated : 28th March 2019 09:32 AM | அ+அ அ- |

கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.3.98 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை , பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.3.98 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் கோவை தொகுதிக்கு உள்பட்ட சூலூரில் ரூ.54 ஆயிரம், பொள்ளாச்சி தொகுதிக்கு உள்பட்ட கிணத்துக்கடவில் ரூ.82 ஆயிரம், பொள்ளாச்சியில் ரூ.2 லட்சம் மற்றும் வால்பாறையில் ரூ.62 ஆயிரம் என மொத்தம் ரூ.3,98,800 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 54 மது பாட்டில்கள், மேட்டுப்பாளையத்தில் 284 என மொத்தம் 338 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...