பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 17 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் சார்பில் 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை புதன்கிழமை நடைபெற்ற நிலையில் 17 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 24 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதில் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன், திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம், அமமுக வேட்பாளர் முத்துகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கணேசமூர்த்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா, சுயேச்சை வேட்பாளர்கள் அன்சாரி, கே.என்.சண்முகசுந்தரம், வி.சண்முகசுந்தரம், கி.சுகுமார், பாலமுருகன், பாலாஜி, ஆர்.பெருமாள், மாணிக்கவேல், சி.முத்துக்குமார், ராமசாமி, ராஜேந்திரன் கோபால் உளிட்ட 17 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.