வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு
By DIN | Published On : 30th March 2019 07:09 AM | Last Updated : 30th March 2019 07:09 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலையொட்டி யாருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வி.வி.பேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வி.வி.பேட் இயந்திரத்தின் மூலம் வாக்களித்த 7 விநாடிகளில் யாருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வி.வி.பேட் இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு காலை 10 முதல் மாலை 5 மணி வரை இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அரசு அலுவலர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...