வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது.
வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப். இவருக்கு சொந்தமாக ஒரு மாடும், கன்றுக் குட்டியும் உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மாட்டையும், கன்றுக் குட்டியையும் தனித்தனியாக தொழுவத்தில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வெள்ளிக்கிழமை காலை பால் எடுக்க தொழுவத்துக்கு சென்று பார்த்தபோது சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் சிறுத்தை வந்து சென்ற பகுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.