கணவரைக் காணவில்லை: போலீஸில் ஆசிரியை புகார்
By DIN | Published On : 15th May 2019 07:17 AM | Last Updated : 15th May 2019 07:17 AM | அ+அ அ- |

சென்னைக்கு வேலை தேடிச் சென்ற கணவரை காணவில்லை என்று போலீஸில் மனைவி புகார் செய்துள்ளார்.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் சீதா பிருந்தா. தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கணவர் செந்தில்குமார் (36). இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் வேலை தேடி சென்னைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அதில் இருந்து இதுவரை இவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை.
இதையடுத்து தனது கணவரை கண்டுபிடித்துத் தரக்கோரி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சீதா பிருந்தா செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். இதனடிப்படையில் ஆய்வாளர் பி.தேவராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.