மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க விழிப்புணர்வுப் பிரசாரம்
By DIN | Published On : 15th May 2019 07:24 AM | Last Updated : 15th May 2019 07:24 AM | அ+அ அ- |

மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாகனப் பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.
சூலூரில் வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு சூலூரில் மொத்தமுள்ள 121வாக்குச் சாவடிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் மையங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் 55 வாக்குச் சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் உள்ளதாகவும் இங்குள்ள மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கு பிரசார வாகனம் சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலரால் ஏற்பாடு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சூலூர் தேர்தல் அலுவலர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.