வால்பாறை
வால்பாறையை அடுத்த அய்யர்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்ன கல்லாறு, பெரிய கல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மற்றும் மானாம்பள்ளி எஸ்டேட் .
இரும்பறை
இரும்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மே 20) மின் விநியோகம் இருக்காது என கோவை வடக்கு மின் பகிர்மான வட்ட மேட்டுப்பாளையம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரும்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கல்லூர், முக்கனூர் உள்ளிட்ட பகுதிகளஇல் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.