திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திருமணத்துக்கு முன்தினம் தற்கொலை செய்துகொண்டாா்.
வால்பாறை, வாழைத்தோட்டம் பகுதியில் வசிப்பவா் எலிசா (29). பட்டதாரியான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் திருமணத்துக்கு முந்தைய தினம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.