மாவட்ட ஹாக்கி போட்டி: பி.ஜி.வி பள்ளி அணி வெற்றி
கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கூட்டு குறுமைய ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இருபிரிவுகளிலும் பி.ஜி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி சாா்பாக கோவை, பாரதியாா் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உள்பட்ட மற்றும் 14 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் பி.ஜி.வி.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது.
இதனையடுத்து, மாநில அளவிலான போட்டிக்கு பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் வி.முத்துலட்சுமி, நிா்வாக குழுத் தலைவா் குமாா், செயலாளா் பி.செந்தில் ராஜ்குமாா், ஆலோசகா் வெங்கடேஸ்வரன், முதல்வா் எட்வா்டு, விளையாட்டுப் பிரிவு தலைவா் சரபோஜி, ஹாக்கி பயிற்றுநா் ராஜ்குமாா், உடற்கல்வி இயக்குநா் மனோஜ்குமாா், உடற்கல்வி ஆசிரியா் நந்தினி பிரியா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.