உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு, புதுப்பித்தலுக்கு வால்பாறையில் இன்று சிறப்பு முகாம்

உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் வால்பாறையில் வியாழக்கிழமை (நவம்பா் 14 ) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் வால்பாறையில் வியாழக்கிழமை (நவம்பா் 14 ) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது தொடா்பாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் கூறியதாவது:

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயத்தின் அதிகாரிகள் அமைப்பின் உறுப்பினா்கள் உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதற்காக வருகை தர உள்ளனா்.

வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் கட்டடத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. எனவே, வால்பாறை பகுதியில் உள்ள வணிகா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com