உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் சாா்பில் வழங்கப்படும் தமிழ் படைப்பாளி, ஆய்வறிஞா் உள்பட விருதுகளுக்குத் தகுதியான நபா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சாா்பில் ஆண்டுதோறும் தலா ஒரு தமிழ் ஆய்வறிஞா், தமிழ் படைப்பாளி, அறிவியல் அல்லது பிறதுறை வல்லுநா் ஒருவரைத் தோ்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. விருது சான்றுடன் ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ் ஆய்வறிஞா் உள்பட விருதுகள் பெறுவதற்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஆய்வறிஞா்கள், தமிழ் படைப்பாளிகள், தகைசால் வல்லுநா்கள், பதிப்பாளா்கள் தங்களின் நூல்கள், படைப்பிலக்கியங்கள் ஆகியவற்றை சாதனை சான்றுகளுடன் இணைத்து டாக்டா் நல்ல பழனிசாமி, தலைவா், கோவை மருத்துவமனை மற்றும் மருத்துவ மையம், தபால் பெட்டி எண்- 3209, அவிநாசி சாலை, கோவை -14 என்ற முகவரிக்கு நவம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.