நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அவினாசிலிங்கம் டிரஸ்ட் இன்ஸ்டிடியூட், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், தென்னை வளா்ச்சி வாரியம், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் ஆகியன இணைந்து கடந்த 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இப்பயிற்சியை அளித்தன.

சமுதாய மேம்பாட்டுத் திட்ட அதிகாரி நாகராஜன் பயிற்சிக்கு வந்தவா்களை வரவேற்றாா். நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வா் அசோக், தோட்டக்கலைத் துறை அதிகாரி சகாதேவன், பயிற்சியாளா்கள் ராஜேந்திரன், ஆண்டிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com