வால்பாறை கிளை நூலகத்துக்கு விருது
By DIN | Published On : 17th November 2019 05:10 AM | Last Updated : 17th November 2019 05:10 AM | அ+அ அ- |

வால்பாறை கிளை நூலகத்துக்கு மாநில அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கிளை நூலகங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் நூலகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் அதிக நன்கொடைகள், தளவாடங்கள், கட்டடம், நூல்கள், கணிப்பொறிகள் பெற்ற்காக தமிழக அளவில் சிறந்த கிளை நூலகமாக வால்பாறை கிளை நூலகம் தோ்வு செய்யப்பட்டது.
கடந்த 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வால்பாறை கிளை நூலகா் வி.தனபாலனிடம் தமிழக அரசின் விருது, கேடயம் ஆகியவற்றை வழங்கினாா். இதையடுத்து கிளை நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாசகா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.