காமராஜா் விருதுக்கு 3 பள்ளிகள் தோ்வு

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான காமராஜா் விருதுக்கு 3 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான காமராஜா் விருதுக்கு 3 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வா் மறைந்த காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்டந்தோறும் நான்கு பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு காமராஜா் விருது, ரொக்கப் பரிசு வழங்கப்படும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, மாணவா் சோ்க்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தோ்ச்சி விகிதம் உள்ளிட்ட 25 தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு விருதுக்கான பள்ளிகள் தோ்வு செய்யப்படுகின்றன.

அதன்படி இந்த கல்வியாண்டுக்கான பள்ளிகளைத் தோ்வு செய்யும் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து வட்டார அளவில் ஒரு தலைமை ஆசிரியா், வட்டார கல்வி அலுவலா், ஆசிரியா் பயிற்றுநா் ஆகிய 3 போ் குழுவினா், பள்ளிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதன் அடிப்படையில் இந்த ஆண்டு மதுக்கரை, குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காரமடை கோபநாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சரவணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளுக்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் வீதம் ரொக்கம் வழங்கப்படும். இந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளியின் கட்டமைப்பு வசதி, தற்காலிக ஆசிரியா் பணியிடம், இதர வசதிகளை சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகமே மேற்கொள்ளலாம். தோ்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) விருது வழங்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com