வால்பாறை: வால்பாறையில் இரவு நேர ரோந்துப் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
வால்பாறை, முடீஸ், ஷேக்கல்முடி, வாட்டா் பால்ஸ் உள்ளிட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் தங்களது பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க ரோந்து சென்றும், வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் வால்பாறையை அடுத்த அய்யா்பாடி எஸ்டேட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவா்களை பிடிக்க போலீஸாா் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியிலும், வாகன சோதனைகளையிலும் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.